Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்து டிரைவர் பலி

பாலக்காடு, ஜூன் 25: கேரள-தமிழக எல்லை கோவிந்தாபுரம் அருகே வயலில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு அருகே பத்திச்சிராவை சேர்ந்த ஆறுமுகனின் மகன் வினோத் (41). டிராக்டர் டிரைவர். இவர், கொல்லங்கோடு சுற்று வட்டார பகுதிகளிலுள்ள விவசாயிகளின் நிலங்களில் நாற்று நடவ உழவு பணி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல டிராக்டர் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, அவர் அந்த டிராக்டரிலேயே அருகே உள்ள வயலிற்கு கடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், டிரைவர் வினோத் டிராக்டருக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் வினோத்தை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.