Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஊட்டி படகு இல்லத்தில் மோட்டார் படகில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊட்டி, மே 25: ஊட்டி படகு இல்லத்தில் இருந்து மோட்டார் படகில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். நீலகிரி மாவட்டம் ஊட்டி புகழ்பெற்ற சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்குள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.  நடப்பு ஆண்டிற்கான கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில், இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கணிசமான அளவிற்கு வருகிறார்கள்.

குறிப்பாக வார இறுதி நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது. வார நாட்களில் இயல்பான அளவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இதனிடையே வார விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் களை கட்டியது. ஊட்டி படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் ேமாட்டார் படகு, மிதிபடகு, துடுப்பு படகுகள் உள்ளன.மழை பெய்த நிலையில் தம்பதிகள் சகிதமாக, 4 பேர் கொண்ட குடும்பமாக வந்தவர்கள் மிதிபடகுகளில் சவாரி செய்தனர். டூரிஸ்ட் பஸ்களில் டூர் வந்தவர்கள் மொத்தமாக மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.