Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொரோனா காலத்தில் பழைய உதகையில் மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை

ஊட்டி,ஜூன் 23: பழைய உதகை பகுதியில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோாி பொதுமக்கள் மனு அளித்தனர். ஊட்டி மிஷனரி ஹில், பழைய உதகையை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த பல ஆண்டுகளாக பழைய உதகை ஸ்டோன் அவுஸ் பகுதியில் பொதுமக்களின் மருத்துவ ேதவைகளுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த சுகாதார மையம் கொரோனா காலத்தில் ஆட்கள் பற்றாக்குறை என கூறி தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் அதன் பின் இதுவரை திறக்கப்படாமல் மூடியே உள்ளது. இங்கு சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் அவசர தேவைக்கு சுமார் 8 கிமீதூரம் வரை சென்று சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இந்த சமயத்தில் நோய்வாய்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்.எனவே குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரையும் மனதில் வைத்து போதுமான மருத்துவ பணியாளர்களை நியமித்து மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.