Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லியங்காடு மாரியம்மன் கோயில் விழாவில் பூவோடு கரகங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

பாலக்காடு, மே 23: பாலக்காடு மாவட்டம் சித்தூர் நெல்லியங்காடு மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் பூவோடு கரகங்கள் எடுத்து தாரை தப்பட்டை முழங்க கடைவீதி, தேவாங்கபுரம், தெலுங்கு வீதி வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். நேற்று சித்தூர் தெலுங்குவீதி பெருமாள் கோயிலில் இருந்து செண்டை வாத்தியத்துடன் பொங்கல் படைப்பதற்காக பெண்கள் வீதியுலா புறப்பட்டனர். அவர்கள் அன்னம்பிள்ளிக்குளம் உச்சிமாகாளியம்மன் கோயிலுக்கு சென்று பின்னர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை உச்சிமாகாளியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.