Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின் இணைப்பை மாற்றியமைக்க லஞ்சம் வாங்கிய மாஜி அதிகாரிக்கு 7 ஆண்டு தண்டனை

பாலக்காடு, ஜூன் 22: திருச்சூரில் லஞ்சம் வாங்கிய மாஜி மின்வாரிய அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே தழவா பகுதியைச் சேர்ந்தவர் கே.சசி (65). இவர் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் மின் வாரியத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு சாவக்காட்டைச் சேர்ந்த நுகர்வோரிடமிருந்து மின் இணைப்பை மாற்றியமைப்பதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். இதனை கையும். களவுமாக திருச்சூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பிடித்து சசியை கைது செய்தனர். இந்த வழக்கு லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த நிலையில் மின் இணைப்ப மாற்றியமைக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாஜி மின்வாரிய உதவி பொறியாளராக இருந்த சசிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.