Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பூமியை நோக்கி வருகிறது வால் நட்சத்திரம்

ஊட்டி,டிச.20: பூமியை நோக்கி வால் நட்சத்திரம் ஒன்று பயணித்திருப்பதாக அறிவியல் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. கட்டபெட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜு பேசியதாவது, 31 அட்லஸ் என்று பெயரிடப்பட்ட ஒரு வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். பூமியிலிருந்து 30 கோடி கிமீ தொலைவில் இந்த வால் நட்சத்திரம் பயணிப்பதால் பூமிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதையும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தில் வெளிப்புறமாக ஊர்ட்ஸ் மேகம் என்ற பகுதி உள்ளது.

இந்தப் பகுதியில் கோடிக்கணக்கான வால் நட்சத்திரங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்று சூரியனுக்கு மிக அருகில் வரும் போது அது வால் நட்சத்திரமாக மாறுகிறது. வால் நட்சத்திரம் என்பது ஒரு ஐஸ் பந்து போன்றது.

சூரியனுக்கு அருகில் வரும் போது அதை சுற்றியுள்ள பனி உருகி ஒரு நீண்ட வால் போன்ற அமைப்பை பெறுகிறது. அதன் மையப்பகுதி ஒரு பாறாங்கல் அமைப்பை பெற்றுள்ளது.அதிலிருந்து கிளம்பும் வால் பகுதி சூரியனுக்கு எதிர் திசையில் நீண்டு செல்லும்.இந்த நட்சத்திரத்தின் வால் பல கோடி கிலோ மீட்டர் வரை நீண்டிருக்கும். தற்போது பூமியை நெருங்கி வரும் 31 அட்லஸ் என்ற வால் நட்சத்திரம் நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள சஜிடீரியல் நட்சத்திர மண்டலத்தில் உள்ளது. அதாவது தனுசு ராசி எனப்படும் பகுதியில் இருந்து பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது இந்த வால் நட்சத்திரம் சூரியனை விட பழமையான ஒரு நட்சத்திரத்தில் இருந்து வருகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். ஆசிரியர் சவுத்ரி நன்றி கூறினார்.