Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கூடலூர், ஜூன் 19: கூடலூரை அடுத்த புத்தூர்வயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் பிரதீப்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாலை விதிகளின் முக்கியத்துவம், மாணவர்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்தல், மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களை இயக்குவதை தவிர்த்தல், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.