Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் ‘கஞ்சா ஹாஸ்டல்’ விவகாரம் போலீசார் கண்காணிக்க எதிர்பார்ப்பு

கோவை, மே 19: கோவை நகர், புறநகர் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பாக புகார்கள் வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து கோவைக்கு ரயில், இதர வாகனங்களில் கஞ்சா, போதை மாத்திரை கடத்தி வருவதாக தெரிகிறது. நகர், புறநகரில் இந்த பொருட்களை வாங்கி சிலர் பதுக்கி விற்கிறார்கள். கல்லூரி மாணவர்கள், ஐடி இளைஞர்கள் என குறிப்பிட்ட சிலரை மையப்படுத்தி போதை வஸ்துக்கள் விற்கப்படுகிறது. இதை தடுக்க ஒருங்கிணைந்த சோதனை நடத்த வேண்டும். கடத்தி வரும் கும்பல் யார், இந்த கும்பலின் பின்னணியில் இருப்பவர்கள,் கல்லூரி பகுதிக்கு சப்ளை செய்பவர்கள், கடைகளில் பதுக்கி வைத்து விற்பவர்கள், நகர், புறநகரில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் போன்றவற்றை உடனடியாக அடையாளம் கண்டு சோதனை நடத்த வேண்டும்.