Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கினி ஆலயத்தின் 188வது ஆண்டு விழா

ஊட்டி, ஆக. 18: ஊட்டி தூய மோட்சராக்கினி ஆலயத்தின் 188வது ஆண்டு விழா நேற்று நடந்தது.

ஊட்டி செயின்ட் மேரிஸ் ஹில்லில் தூய மோட்சராக்கினி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 188வது ஆண்டு விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் மாலை சிறப்பு ஜெபமாலை, நவநாள், மறையுரை மற்றும் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் காலை முதல் திருப்பலியை மறைமாவட்ட ஆன்மீக குரு ஞானதாஸ் நிறைவேற்றினார். ஆங்கில திருப்பலியை புனித சூசையப்பர் கல்வியல் கல்லூரி தாளாளர் நோயல் ஸ்டீபன் ரொசாரியோ சிறப்பித்தார்.

முதன்மை குரு தலைமையில் பங்கு குரு பெனடிக்ட், ஆன்ம குரு ஞானதாஸ், கிருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் மற்றும் உதவி பங்கு குரு இணைந்து ஆடம்பர திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை அஜின் ஜோசப் சக்கலக்கல் தலைமையில் மலையாள திருப்பலி நடந்தது. தொடர்ந்து மாலை, விண்ணேற்பு மாதாவின் சுரூபம் தாங்கின சப்பரத்தை நகர்மன்ற தலைவி வணிஸ்வரி மற்றும் நகர மன்ற உறுப்பினர் பிளோரினா மார்ட்டின் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேரிஸ் ஹில்லில் இருந்து புறப்பட்டு பெடாம்ஸ் சாலை, வில்லோபண்ட் சாலை வழியாக சென்று புனித சூசையப்பர் ஆலயம் வந்தடைந்தது. இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.