Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியில் தூர்வாராத கழிவுநீர் கால்வாயால் துர்நாற்றம்

கோத்தகிரி,ஜூன் 18: கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட பாண்டியன் பார்க் பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரியில் இருந்து குன்னூர், ஊட்டி செல்லக்கூடிய பிரதான சாலையில் பாண்டியன் பார்க் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தனியார் உணவகங்கள், சிற்றுண்டிகள் செயல்பட்டு வருகின்றன. குக்கிராமங்களின் பிரதான சாலை வழி சந்திப்பு என்பதால் நாள்தோறும் எண்ணற்ற பொதுமக்கள் இந்த வழியாக சென்று வருகின்றனர். சமீப நாட்களாக பாண்டியன் பார்க் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.நகராட்சி நிர்வாகம் மூலம் முறையாக தூர்வாரப்படாததால் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரதான சாலை என்பதால் அந்த வழியாக பயணிக்கக்கூடிய பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை நிலவுகிறது. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் முன் பாண்டியன் பார்க் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.