Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கரியமலை பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

மஞ்சூர், ஆக.17: கரியமலை கிராமத்தில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கரியமலை. 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் தேயிலை விவசாயத்துடன் பட்டானி, பீன்ஸ், அவரை, உருளைகிழங்கு, கேரட் உள்ளிட்ட பலவகையிலான மலைகாய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் 100க்கணக்கான குரங்குகள் முற்றுகையிட்டு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர் செடிகளை பிடிங்கி பெரும் நாசம் செய்து வருகிறது. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்படைந்து மலைகாய்கறிகள் பயிரிடுவதையே தவிர்த்துள்ளனர். மேலும், இப்பகுதியில் திறந்து கிடக்கும் வீடுகளில் புகுந்து தின்பண்டங்களை துாக்கி செல்வதும், பொருட்களை வாரியிறைப்பதும் வாடிக்கையாக உள்ளது. குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது இப்பகுதி பொதுமக்களை கடும் அதிருப்திகுள்ளாக்கியுள்ளது.