Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பரம்பிக்குளம் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்

பாலக்காடு, ஜூலை 14: பாலக்காடு கேபிஎம் கலையரங்கில் கேரள மின் துறை அமைச்சர் சன்னி ஜோசப் தலைமையில் மின்வாரிய உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசுகையில், ‘‘நுகர்வோர் மின்வாரிய அலுவலகங்களுக்கு புகார் தெரிவிக்க போன் செய்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். மின்சாரத்தின் பாதுகாப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கஞ்சிக்கோடு தொழிற்பேட்டை பகுதிகளில் மின்சார தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் அமைக்கப்படும்.

பரம்பிக்குளம் வனப்பகுதியில் வசிக்கின்ற ஆதிவாசியினர் ஊர்களுக்கு மின் இணைப்புகள் உடனடியாக வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சுமேஷ் அச்சுதன், பிரபாகரன், பிரேம்குமார், மம்மிக்குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.