Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி

பாலக்காடு, ஜன. 14: கேரள மாநிலம் கோட்டயம் அடுத்துள்ளது எ.சி. சாலை. இங்குள்ள மோனிப்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் (52). இவரின் மனைவி அம்பிளி (48). இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் கொல்லத்தைச் சேர்ந்த சுரஜ், அவரது மனைவி சுகி, இத்தம்பதியின் மகன்கள் அர்ஜித் (5), கோகுல் இவர்கள் 6 பேரும் காரில ஆலுவா திருவைராணிக்குளம் சிவன் கோயிலுக்கு சென்றனர்.

தரிசனம் முடித்து நேற்று முன்தினம் கோட்டயம் நோக்கி புறப்பட்டனர். கூத்தாட்டுக்குளம் பகுதியை நோக்கி வந்தபோது காரும், கேரள அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதியது.இந்த விபத்தில் சுரேஷ், அவரின் மனைவி அம்பிளி, நண்பரின் மகன் அர்ஜித் ஆகியோர் பலியானார்கள். சுரஜ், அவரது மனைவி சுகி, இளைய மகன் கோகுல் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குருவிலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.