Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விவசாயிகளுக்கு கைகொடுத்த மழை சுறுசுறுப்படையும் வேளாண் பணிகள்

ஊட்டி,அக்.12: நீலகிரி மாவட்டத்தில் எல்-நினோ விளைவு காரணமாக மழை பெய்யாததால் விவசாய பணிகள் பாதித்ததால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்து வருவாயின்றி முடங்கி இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக மீண்டும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. இதனால் நிம்மதியடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே இறுதியில் இருந்து செப்டம்பர் வரை தென் மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்யும்.

இந்த இரு பருவ மழைகளால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள் மற்றும் நீரோடைகளில் நிரம்பும். குடி தண்ணீர் பிரச்னையும் இருக்காது. விவசாய பணிகளும் தடையின்றி நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு எல்-நினோவின் தாக்கம் காரணமாக தென்மேற்கு பருவமழை ஏமாற்றியது. நீலகிரி மாவட்டம் முழுவதும் சராசரியாக 55 சதவீதத்திற்கும் மேல் மழை பற்றாக்குறை பதிவானது. மழையின்மையால் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகள்,குடிநீர் ஆதாரமாக உள்ள நீரோடைகள், குளங்கள் போன்றவை வறண்டன. இதனால் பல இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட ஏற்பட்டது.