ஊட்டி,அக்.12: நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் தகுதி வாய்ந்த இளம், முதல்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்து ெகாள்ள சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இளம், முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. முதல்முறை, இளம் வாக்காளர்களின் வாக்காளர் பட்டியல் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் அறிவுறுத்தியது.
இதன்படி நீலகிரி மாவட்டத்தில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில், பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடந்தது. ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 தொகுதிகளிலும் உள்ள வாக்குசாவடிகளில் இம்முகாம் நடைபெற்றது. ஊட்டியில் உள்ள வாக்குசாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆர்டிஒ., டினு அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் நடைெபற்ற சிறப்பு முகாமினை சப்.கலெக்டர் காஞ்சன் சௌத்ரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


