ஊட்டி, ஆக. 10: நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் 1.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலா தலமாக இருப்பதால் இங்கு குடியிருப்புகள் மட்டுமின்றி ஓட்டல்கள், ஏராளமான தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. தினசரி 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையாக பார்சன்ஸ்வேலி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ஊட்டி நகராட்சிக்கென 3 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ஊட்டி நகராட்சியை பொறுத்த வரை பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து 70 சதவீதம் தண்ணீரும் மற்ற சிறிய அணைகளில் இருந்து 30 சதவீதம் தண்ணீரும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
+
Advertisement



