பந்தலூர்,ஆக.10: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பந்தலூர் அருகே சேரம்பாடியில் பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்கள் என்ற காரணத்தைக் கூறி, சில இடங்களில் அவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேரம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement



