ஊட்டி, ஆக. 8: கலைஞரின் 8வது ஆண்டு நினைவு நாள் நீலகிரி பாராளுமன்ற அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் போஜன், மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பி இஸ்மாயில், பாராளுமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் நந்தி ரவி, மேற்கு நகர பொறுப்பாளர் ரமேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஷ், வாணீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தலைவர் கலைஞரின் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும், கலைஞரின் அரசியல் பயணம் குறித்தும், அவரது சாதனைகளையும் பலரும் நினைவு கூறினர். இந்நிகழ்ச்சியில், நகர துணை செயலாளர்கள் கார்டன் கிருஷ்ணன், ரீட்டா மேரி, மாவட்ட பிரதிகள் வெங்கடேஷ், கார்த்திக், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் மஞ்சு குமார், விஜயகுமார், செல்வராஜ், கவுன்சிலர்கள் கீதா, பிரியா, மேரி பிளோரினா, புளோரினா புஷ்பராஜ், விஷ்ணு பிரபு, கஜேந்திரன், நிர்வாகிகள் புஷ்பராஜ், நிக்கோலஸ், கமலக்கண்ணன், சுரேஷ், உமேஷ், ஜமீல், மகேஷ், சிவா, முஜிபுர், ஹென்றி ஜேம்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



