Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

எச்பிஎப் சாலையில் குதிரைகள் சுற்றித்திரிவதால் விபத்து அபாயம்

ஊட்டி, ஆக. 7: எச்பிஎப் பகுதியில் சாலையில் வலம் வரும் குதிரைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் கூடலூர் வழியாக ஊட்டி வருகின்றனர். ஊட்டி - கூடலூர் சாலையில், சாதாரணமாக அனைத்து வாகனங்களும் சற்று வேகமாக வரும்.

குறிப்பாக, ஊட்டி அருகேயுள்ள எச்பிஎப்., பகுதியில் வாகனங்கள் வேகமாக வருவது வழக்கம். இந்நிலையில், இப்பகுதியில் சாலையில் எந்நேரமும் குதிரை கூட்டம் சுற்றித்திரிகிறது. இவைகள் வாகனங்கள் வரும்போது அங்குமிங்குமாக ஓடுவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, ஊட்டி - கூடலூர் சாலையில் எச்பிஎப் பகுதியில் சுற்றித்திரியும் குதிரை கூட்டத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.