ஊட்டி, ஆக. 7: குன்னூர் வட்டார அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது.குன்னூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், மாதம் தோறும் வட்டார அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் குன்னூர் வாட்டாரத்தில் வரும் 12ம் தேதி காலை 11 மணிக்கு சிம்ஸ்பூங்கா அலுவலகத்தில் நடக்கிறது.
இக்கூட்டத்தில், வேளாண் வணிகம், தோட்டக்கலை, நீலகிரி விற்பனைக்குழு, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, ஆவின், தேயிலை வாரியம், இன்ட்கோசர்வ் ஆகிய துறைகளின் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, விவசாயிகள் விவசாயம் சம்பந்தமான குறைகள் இருப்பின் இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம். குன்னூர் வட்டார விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சார்ந்த கோரிக்கைகளை நேரடியாக மனு கொடுத்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



