கோபி,ஆக.5: தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த உத்தரவாதத்தின் படி, தமிழ்நாடு அரசு முழுமையாக வேளாண் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோபி அருகே உள்ள அயலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோபி அருகே அயலூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் செல்வக்குமார் தலைமையில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி முன்னிலையில் திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தவெகவின் தேர்தல் வாக்குறுதிப்படி வேளாண் கடனை தள்ளுபடி செய்ய கோரி முழுக்கமிட்டனர். தேர்தல் வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடி செய்யாமல், முதலமைச்சரும் தவெக அரசும் விவசாயிகளை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், பயிர்கடன் முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.
+


