Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பூந்தொட்டிகள் தயார் செய்யும் பணி: பீட்ரூட் விளைச்சல் அதிகரிப்பு

ஊட்டி, செப். 5: ஊட்டியில் பீட்ரூட் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான கேத்தி பாலாடா, கொல்லிமலை, செலவிப்நகர், முத்தோரை பாலாடா, கல்லக்கொரை ஆடா உள்ளிட்ட பல பகுதிகளில் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பட்டாணி உள்ளிட்டவைகள் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகின்றன. நீலகிரி காய்கறிகளுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. இதனை இங்கு வர கூடிய சுற்றுலா பயணிகளும் வாங்கி செல்கின்றனர். இதனிடையே எல்-நினோ தாக்கம் காரணமாக தண்ணீர் பற்றாகுறை காய்கறி விவசாய பணிகள் பாதிப்படைந்துள்ளன. கேரட் பயிரை பொறுத்த வரை 120 நாட்கள் பயிர் என்பதாலும், அதிக தண்ணீர் தேவை இருப்பதாலும் கேரட் விவசாய பணிகள் பாதித்துள்ளது. அதே சமயம் பீட்ரூட் பயிர் 60 நாட்களில் விளைச்சலை தரும். தண்ணீர் பயன்பாடும் குறைவு.

அறுவடை செலவுகளும் குறைவு என்பதால் பெரும்பாலான விவசாயிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பீட்ரூட் பயிரிட்டிருந்தனர். முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா, கல்லக்கொரை ஆடா உள்ளிட்ட பகுதிகளில் பீட்ரூட் பயிரிடப்பட்டிருந்தது. அதற்கேற்ப கடந்த மாதத்தில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இது பயிர் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருந்தது. நல்ல விளைச்சல் கிடைத்ததால் பீட்ரூட் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த கேரட்களை அறுவடை செய்து விற்பனைக்கான அனுப்பி வருகின்றனர். உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரட் வரத்து குறைந்ததால் கடந்த வாரத்தில் ரூ.70 முதல் 80 வரை விலை கிடைத்து வந்தது. தற்போது சற்று விலை குறைந்து நல்ல தரமான பீட்ரூட் கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.