Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் நிறைவு இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஊட்டி,அக்.2: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் சுற்றுலா பயணிகள் காண அனுமதிக்கப்படவுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்தது. ஆண்டு தோறும் ஊட்டியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் கடை பிடிக்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் கடை பிடிக்கப்படுகிறது. இரண்டாம் சீசன் இம்மாதம் முதல் வாரம் முதல் துவங்கிய நிலையில், தற்போது தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. 15 ஆயிரம் தொட்டிகளை கொண்டு மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் மலர் செடிகளில் பல்வேறு வகையான, வண்ணங்களில் பூங்கா முழுவதிலும் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. தற்போது பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், இன்று முதல் மலர் அலங்காரங்களை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இம்மாதம் முழுக்க இந்த மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு செல்ல வாய்ப்புள்ளது. ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையின் போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை முழுமையாக கண்டு ரசிக்கலாம்.