Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரயில் முன் குதித்து முதியவர் தற்கொலை

பாலக்காடு, ஆக. 1: திருச்சூர் அருகே உள்ள பொணுக்கராவை சேர்ந்தவர் சசாங்கன் (61). இவர் திருச்சூர் அருகே குருப்பம் சாலையிலுள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சொப்னா என்ற மனைவியும், விஸ்மய் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் சசாங்கன் திருச்சூர் ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் நின்றுகொண்டிருந்தார். திடீரென கண்ணூர்-ஆலப்புழா எக்ஸ்பிரஸின் முன் குதித்து தற்கொலை செய்தார். ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்சூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.