விகேபுரம், செப். 30: நெல்லை மாவட்டம், விகேபுரம் அம்பலவாணபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன் கணேசன் (40). பத்தமடை காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 27ம் தேதி பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். கல்லிடைக்குறிச்சி பைபாஸ் சாலையில் வந்தபோது அதேவேளையில் எதிரே வந்த பைக் இவரது பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சற்று குணமானது வீட்டிற்கு வந்த கணேசனுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே கணேசன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.விபத்து பற்றி விகே புரம் எஸ்ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


