Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விகேபுரத்தில் கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு

விகேபுரம்,செப்.30: கடந்த 2002ம் ஆண்டு எல்லை போரில் தனது இன்னுயிரை தியாகம் செய்து நாட்டை காத்த விகேபுரத்தில் பிஎஸ்எப் வீரர் பாலகிருஷ்ணன் நினைவாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் 64 அணிகள் பங்கேற்றன.

இறுதிப்போட்டி விகேபுரம் பாலு மெமோரியல் கிரிக்கெட் கிளப் மற்றும் செங்கோட்டை அணிகளுக்கிடையே நடந்தது. இதில் செங்கோட்டை அணியினர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு அம்பை டிஎஸ்பி கணேஷ் குமார் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். கேம்பிரிட்ஜ் பள்ளி குழும நிர்வாகி ஜோசப் லியாண்டர், கடம்பூர் இளைய ஜமீன் அருண் ராஜா, முத்துக்குமார், நேபால் ராஜ், வேம்பு, சுந்தர், செல்வகுமார் ஆகியோர் பரிசுத் தொகை மற்றும் விருதுகள் வழங்கினர்.

நிகழ்வில் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் ரவிசங்கர், செல்வம், ஆனந்தன், திருவள்ளுவர் கல்லூரி கணிதத் துறை தலைவர் அண்ணாதுரை திருவள்ளூர் கல்லூரி நிர்வாக அலுவலர் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் பழனியப்பன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அகத்தியமலை மனவளம் காக்கும் கரங்கள் தலைவர் ராஜாராம், செயலாளர் பாலு, ஒருங்கிணைப்பாளராக வனராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.