Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிவகிரியில் மாட்டு வண்டிகளில் குளத்து மண் கடத்திய 2 பேர் கைது

சிவகிரி, செப்.30: தென்காசி மாவட்டம், சிவகிரி இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின், எஸ்ஐ வாசுதேவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு தேவிப்பட்டணம் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது சொக்கநாதன் புதூரைச் சேர்ந்த கோட்டியப்பனின் மகன் சண்முகசுந்தரம் (51), சாமிநாதனின் மகன் சுப்பிரமணியன் (77) ஆகிய இருவரும் பெரியகுளத்தில் இருந்து எடுக்கப்பட்ட குளத்து மண்ணை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு அருகேயுள்ள செங்கல் சூளைக்கு கடத்திச்செல்வதை கண்டறிந்தனர். இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், மணலுடன் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைதுசெய்தனர்.