Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிவகிரி அருகே மதுபாட்டில்களை பதுக்கிய 2 பேர் கைது

சிவகிரி,செப்.26: சிவகிரி அருகே தேவிபட்டணம் விலக்கில் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். இதைதொடர்ந்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் 30 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேவிப்பட்டணம் மேட்டு தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் அம்மாசி கனி (82), மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்தையா மகன் தங்கமலை (62) என்பதும், மது பாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.