நெல்லை, செப்.26: நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. நெல்லை தென்கிழக்கு மாவட்ட செயலாளரும் நாங்குநேரி எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமை வகித்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் மகேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
+
Advertisement
