Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மானூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

நெல்லை, செப் 25: நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் டாக்டர் இம்மானுவேல் நற்பணி இயக்கம் இணைந்து மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் மானூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை முகாமை நெல்லை வடக்கு மாவட்ட தவெக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.முருகன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

முகாமில் மொத்தம் 595 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 160 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து செலவுகளும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் முகாமில் பங்கேற்ற 113 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், டாக்டர் இம்மானுவேல் மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிர்வாகிகள் ஆகியோரை பாராட்டி அவர்களுக்கு ஆர்.எஸ்.முருகன் எம்எல்ஏ விருது வழங்கினார். நிகழ்ச்சியில் நெல்லை வடக்கு மாவட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் மானூர் பகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.