Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குருவிகுளத்தில் பரிதாபம்: வாலிபர் மயங்கி விழுந்து சாவு

திருவேங்கடம், செப்.25: தென்காசி மாவட்டம் குருவிகுளம் முதலியார் தெருவைச் சேர்ந்தவர் மணி மகன் பாலகிருஷ்ணன்(34). திருமணம் ஆகவில்லை. வீடுகளுக்கு கொசு மருந்து அடிக்கும் வேலை செய்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் நடந்த பைக் விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு வந்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பாலகிருஷ்ணன் மீண்டும் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் பாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.