Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வெண்பன்றி வளர்ப்புக்கு தேவையான கோழி கழிவுகள் வழங்க நடவடிக்கை

நெல்லை, செப்.23: நெல்லை மாவட்ட வெண்பன்றிகள் வளர்ப்போர் சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக கோழி கழிவுகள் மற்றும் உணவகங்களில் கழிவுகளை எடுத்து வெண்பன்றிகள் வளர்த்து வருகிறோம். இதன் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறோம்.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள கோழி கழிவுகளை கேரளாவில் இருந்து தொழில் செய்து வரும் தனியார் நிறுவனம் பெறவும், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்து சில நபர்கள் இத்தொழிலில் தலையிட்டு அச்சுறுத்தல் செய்யும் நிலையும் உருவாகியுள்ளது. ஆகவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களை வெண்பன்றி வளர்ப்பு தொழில் செய்ய ஏதுவாக மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். இதற்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.