Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சாலையில் மெகா பள்ளம்

பாவூர்சத்திரம், செப்.23: பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில், நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையின் வடபகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இதனருகே அரசு கால்நடை மருத்துவமனை, நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மையம், குலசேகரப்பட்டி வி.ஏ.ஓ. அலுவலகம், அரசு சித்த மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. மேலும், காமராஜ் நகர் வடக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் இந்த வழியாகவே பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பகுதிகளுக்கு செல்லும் முக்கிய நுழைவுச் சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, கர்ப்பிணிகள் உடல் பரிசோதனை மற்றும் மகப்பேறுக்காக ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் மருத்துவமனைக்கு வரும்போதும், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் நோயாளிகளை அழைத்து வரும் வாகனங்களும் இந்த பள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது சரியாக தெரியாததால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் நோயாளிகள், கர்ப்பிணிகளின் நலனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த மெகா பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.