கேடிசி நகர், அக். 22: சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு பனவடலிசத்திரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் காட்டு ராஜா (65). இவர் சம்பவத்தன்று பனவடலிசத்திரம் பஜார் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக், எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் காட்டு ராஜா, நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


