தென்காசி, ஆக.21: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மேற்கு கிளை சார்பில் தெருமுனைப் பிரசாரம் நடந்தது. தென்காசி அரிப்புக்கார தெருவில் நடந்த பிரசாரத்தில் மாநில பேச்சாளர் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி மாநபி வழியா மவ்லித் என்ற தலைப்பிலும், மாவட்ட துணை செயலாளர் வடகரை செய்யது அலி, இந்திய சுதந்திரமும், இஸ்லாமியர்களின் தியாகமும் என்ற தலைப்பிலும் பேசினர்.
கூட்டத்தில் நிதிப்பங்கீட்டை அதிகரிப்பதற்கும் ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மற்ற சமூகங்களை விட பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்திருந்தனர்.



