Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த இருவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

தென்காசி, ஆக.21: தென்காசி மாவட்ட வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,  பழைய குற்றாலம் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வனத்துறை மறித்த போதும் நிற்காமல் வன அலுவலரை தள்ளிவிட்டு வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், ராஜா ஆகிய 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின்படி 25000 ரூபாய் இணக்க கட்டணமாக விதிக்கப்பட்டது.

இதுபோன்று வனப்பகுதிக்குள் அத்து மீறி நுழைவது, வேட்டையாடுவது, சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பது, வனப் பகுதிக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது, போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். இதுகுறித்த தகவல்கள் ஏதும் இருப்பின் தென்காசி மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 04633 233 550 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.