சுரண்டை,ஆக.19: மண்டல அளவிலான தடைகளை போட்டியில் சுரண்டை எஸ்.ஆர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். எம்எஸ்எஸ்சி மண்டல அளவிலான தடகளப் போட்டி இடைகால் ஸ்டேக் ஹைடெக் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற சுரண்டை எஸ்.ஆர் பள்ளி ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் பள்ளி மாணவர்கள் உயரம் தாண்டுதலில் இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்றுச் சாதனை படைத்தனர். இதேபள்ளியைச்சார்ந்த மாணவர் மும்முறை நீளம் தாண்டுதலில் மூன்றாமிடமும், 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர்.
மாணவிகளுக்கான குண்டு எறிதலில் இரண்டாமிடமும், 1500 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், தட்டு எறிதலில் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன. எஸ்.ஆர்.பள்ளி அணியினர் 8 வெள்ளிப் பதக்கங்களும், 4 வெண்கலப் பதக்கங்களும் பெற்று சாதனை படைத்தனர். குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவ பபிஸ் ராம், பள்ளியின் செயலர் சிவடிப்ஜினிஸ் ராம், முதல்வர்கள் பொன் மனோன்யா, புஷ்பா, தலைமையாசிரியர் மாரிக்கனி ஆகியோர் வெற்றி பெற்றவர்களை வெகுவாக பாராட்டினார்.


