Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புளியங்குடியில்சைபர் குற்ற விழிப்புணர்வு பேரணி

புளியங்குடி,ஆக.19: புளியங்குடியில் தங்கபழம் கல்வி குழும நிறுவனங்கள் மற்றும் தென்காசி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் சைபர் குற்ற விழிப்புணர்வு பேரணி சிந்தாமணி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் தங்கபழம் குழும நிறுவனங்களின் நிறுவனர் தங்கபழம், செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கூடுதல் எஸ்பி ஜூலியஸ் சீசர் பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிந்தாமணி பேருந்து நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, முக்கிய வீதிகள் வழியே சென்று டிஎன்புதுக்குடி பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்தது. பேரணியில். தங்கபழம் குழும நிறுவனங்களை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து சைபர் குற்றங்களைத் தடுப்பது, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பேரணியில் டிஎஸ்பி நமசிவாயம், தென்காசி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தி, புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் சஸ்பெக்டர்கள், மகளிர் சிறப்புப் படை காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.