Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

சங்கரன்கோவிலில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

சங்கரன்கோவில்,ஆக.19: சங்கரன்கோவில் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் வட்டார கல்வி அலுவலர் குருசாமி முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சண்முக வடிவு வரவேற்றார்.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துச்செல்வி, உதவி உபகரணங்கள் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் பேசினார். நிகழ்ச்சியில் 20 குழந்தைகளுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், 4 குழந்தைகளுக்கு நடை பயில்வதற்கான ரொலேட்டார், 1 குழந்தைக்கு மடக்கு நாற்காலி, 5 குழந்தைகளுக்கு கால்களை வலுப்படுத்தவும் நிற்கவும் உதவ காலிபர் வழங்கப்பட்டது. சிறப்பு பயிற்றுநர் ஜெயகுமார் நன்றி கூறினார்.