Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆர்.எஸ்.முருகன் எம்எல்ஏ இன்று நெல்லை வருகை

நெல்லை, மே 15: நெல்லை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஆர்.எஸ்.முருகன் இன்று நெல்லை வருகிறார். அவருக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர். இதனைத்தொடர்ந்து அவர் நெல்லையில் உள்ள தேசிய தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.எஸ்.முருகன் சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதையடுத்து ஆர்.எஸ்.முருகன் எம்எல்ஏ சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர் நெல்லை வரும் அவருக்கு தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் கே.டி.சி. நகர் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து நெல்லையில் உள்ள தேசிய தலைவர்கள் சிலைக்கு ஆர்.எஸ்.முருகன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.