தென்காசி, ஆக.14தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 20ம்தேதி சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255வது நினைவு தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி மற்றும் கடையநல்லூர் வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட சில அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றம், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் (FL1, FL2, FL3, FL3A, FL11) ஆகியவை 20ம்தேதி மட்டும் மூடப்பட்டிருக்கும் எனவும், அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


