Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காரையாறு கோயில் பகுதியில் பக்தர்கள் குடில் மீது மரக்கிளை முறிந்து விழுந்து 2 பேர் காயம்

விகேபுரம், ஆக.14:தூத்துக்குடி மாவட்டம் புதூரை சேர்ந்தவர் மகாலிங்கம். மேலக்கூட்டாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர்கள் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் அமைக்கப்பட்ட குடிலில் தங்கியிருந்தனர். மகாலிங்கம் குடிலில் 5 பேரும், சக்திவேல் குடிலில் 12 பேரும் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் குடிலுக்கு மேலே இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் அங்கிருந்த பேச்சியம்மாள், செந்தில் விநாயகம் ஆகிய இருவரும் காயமடைந்தனர். தகவலறிந்த அம்பை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பலவேசம் தலைமையான குழுவினர் விரைந்து சென்று கிளையை அப்புறப்படுத்தினர். காயமடைந்தவர்களுக்கு கோயில் பகுதியில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.