Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்

விகேபுரம், ஆக.14: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு விகேபுரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிதண்ணீர் சின்டெக்ஸ் டேங்க் 5 இடங்களிலும், மொபைல் டாய்லெட் நான்கு இடங்களிலும், அதற்கு தேவையான தண்ணீர் இரண்டு லாரிகளிலும் மற்றும் 30 நகராட்சி தூய்மை பணியாளர்கள் நான்கு நாட்கள் கோயில் பகுதிகளில் தங்கி தூய்மை பணியை செய்தனர்.

இப்பணிகளை நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள் ஆய்வு செய்தார். அத்துடன் நகராட்சி சார்பில் செய்து வரும் பணிகள் குறித்து பக்தர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது கவுன்சிலர் விக்னேஷ், காரையாறு திமுக வார்டு செயலாளர் ஜெயராம் ஆகியோர் உடன் இருந்தனர்.