Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சுரண்டை அருகே பிறந்து இரண்டு நாளே ஆன பச்சிளங்குழந்தை குளத்தில் வீச்சு

சுரண்டை, மே 14: சுரண்டை அருகே பொய்கையில் உள்ள குளத்தில் பிறந்து இரண்டு நாளே ஆன பெண் குழந்தையை வீசி சென்ற கல்மனம் படைத்தவர்களை சேர்ந்தமரம் போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே பொய்கை கிராமத்தில் உள்ள குளத்தில் குழந்தை சடலமாக மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டனர். பிறந்த இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தை என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.