சிவகிரி, ஆக. 13:வாசுதேவநல்லூர்ஒன்றியக்குழு கூட்டம் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன், நிர்வாக அலுவலர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக பிரிவு உதவியாளர் சண்முகத்தாய் அஜெண்டா வாசித்தார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள், கனகராஜ், முனியராஜ், செல்வி, சரஸ்வதி, ஜெயராம், அருணாதேவி, விமலா, மகாலட்சுமி, லில்லிபுஷ்பம், மாற்றுத்திறனாளி நியமன குழு உறுப்பினர் தங்க மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 2024-2025 மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் பணிகள் தேர்வு செய்யப்பட்டது.
மேலும் 2025-2026ல் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.யூனியன் பொறியாளர்கள் முருகையா, முருகேஸ்வரி,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜெயமாரி, நாகூர் மீரான், பாபு,மாலதி,, தலைமை யிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கள் முத்து பாண்டியன், முருகன், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



