களக்காடு, ஆக. 13: நாங்குநேரி வட்டச்சட்ட பணிகள் குழுவின் சார்பில், நாங்குநேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதனை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது. நாங்குநேரி நீதிமன்ற நீதிபதியும், சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான ரஸ்கின் ராஜ், குற்றவியல் நடுவர் நீதிபதி பூமிநாதன், மாவட்ட உரிமையியல் நீதிபதி மஞ்சுளா ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு, விழாவை தொடங்கி வைத்தனர். இதில் வக்கீல்கள், வனத்துறையினர், இயற்கை நல ஆர்வலர்கள் பங்கேற்றனர். அதனைதொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
+
Advertisement



