கேடிசி நகர், ஆக. 12: பாளை அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பாளையங்கோட்டை சீவலப்பேரி அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் வேலுசாமியின் மகன் முகேஷ் கண்ணன் (25). இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த முகேஷ் கண்ணன் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதுகுறித்து தெரியவந்ததும் பதறிய உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இருப்பினும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



