Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நெல்லை அருகே பைக் மீது கார் மோதி பூசாரி பலி

கேடிசி நகர், ஆக. 12: கயத்தாறு அருகே பைக் மீது கார் மோதியதில் காயமடைந்த பூசாரி பரிதாபமாக இறந்தார். சாத்தான்குளம் சாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிச்சை ராகவன்(25). இவர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று கோவில்பட்டிக்கு தனது பைக்கில் புறப்பட்ட அவர் நெல்லை- கோவில்பட்டி நான்குவழிச்சாலையில் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி பகுதியில் சென்றபோது அவரது பைக் மீது கார் மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிச்சை ராகவனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிச்சை ராகவன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.