மானூர், ஆக. 12: நெல்லை மாவட்டம், மானூர் அருகேயுள்ள சேதுராயன் புதூரை சேர்ந்த மாரிதுரையின் மகன் ராஜா (38). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுடலைமணியின் மகன் செல்வமுருகன் (20) என்பவருக்கும் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜா வீட்டுக்கு சென்ற செல்வமுருகன் அவரது வீட்டு முன்பிருந்த பைக்கை சேதப்படுத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றார். பின்னர் இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த மானூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, மிரட்டல் விடுத்த செல்வ முருகனை கைது செய்தார்.



