விகேபுரம்,ஆக.5: விகேபுரம் அருகே கரடி தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நெல்லை புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார். விகேபுரம் அருணாசலபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் முருகன் (61). விவசாயியான இவர் மேல ஆம்பூர் கிராமத்தில் விகேபுரத்தை சேர்ந்த பொன்வேல்ராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 31ம் தேதி வழக்கம் போல் தோட்டத்திற்குச் சென்ற முருகனை அங்கு பதுங்கியிருந்த கரடி ஒன்று திடீரென தாக்கியதில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன் அவரது குடும்பத்திற்கு ேநரில் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். நிகழ்வின்போது விகேபுரம் நகரச் செயலாளர் கண்ணன், மகளிர் அணி மாவட்டச் செயலாளர் இமாக்குலேட், இசக்கி முத்து, மாவட்ட பிரதிநிதி கல்யாணசுந்தரம், வக்கீல் செல்வ அந்தோனி, குண்டு கண்ணன், செண்டிரிங் கணேசன், முனியசாமி மகளிர் அணி பத்மா உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
